முத்தரப்பு டி20: நமீபியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
முத்தரப்பு டி20: நமீபியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
Published on

விந்தோக்,

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா 195 ரன்கள் குவித்துள்ளது.

நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது.

ஜிம்பாப்வே - நமீபியா

நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் மோது வருகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே 195 ரன்கள்

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் ரயன் பெர்ல் அதிகபட்சமாக 57 ரன்கள் குவித்தார்.

நமீபியா தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஹர்ஹார்டு எரஸ்மஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா களமிறங்கி விளையாட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com