

பெல்பாஸ்ட்,
இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆடுவதற்காக அயர்லாந்துக்கு சென்றுள்ளது. அதன்படி, இந்தியா- அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று தொடங்கியுள்ளது.
சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் அய்யரை நியமித்த பிறகு இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டெக்டர் 17 ரன்னிலும், அடயர் 12 ரன்னிலும், ஹாரி டெக்டர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 51 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது லோர்கன் டக்கர் - டெலனி இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியை சரிவில் இருந்து மீட்டனர். டக்கர் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். டெலனி 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.