10-ம் வகுப்பு தேர்வை தவிர்க்கும் வைபவ் சூர்யவன்ஷி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பிரபல கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தவிர்க்க உள்ளார் .
10-ம் வகுப்பு தேர்வை தவிர்க்கும் வைபவ் சூர்யவன்ஷி
Published on

பீகார்,

பீகாரில் உள்ள பள்ளியில் படிக்கும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி , 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை இந்த ஆண்டு எழுதப்போவதில்லை என முடிவு செய்துள்ளார். நாளை தொடங்கும் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கிடைத்திருந்தாலும், அவர் தேர்வில் பங்கேற்கவில்லை என்று அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதால், வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் வருகைப்பதிவு குறைந்திருந்தது. இருப்பினும் பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் சரியாக படிக்காததால் தேர்வு எழுத செல்லவில்லை என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற யு19 உலகக் கோப்பையில் வைபவ் 7 போட்டிகளில் 439 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று தந்தார். ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Also Read
“பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையை அதிகரிக்கிறது” - இஷான் கிஷன்
10-ம் வகுப்பு தேர்வை தவிர்க்கும் வைபவ் சூர்யவன்ஷி

மேலும், யு19 ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் வைபவ் திகழ்கிறார். 25 இன்னிங்ஸ்களில் 4 சதங்களுடன் 1,412 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com