யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: அட்டவணை அறிவிப்பு

இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் போட்டியை நடத்தும் நேபாள அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: அட்டவணை அறிவிப்பு
Published on: 

3-வது 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2027 ஜனவரி 21 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் போட்டியை நடத்தும் நேபாள அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

நான்கு பிரிவுகளில் 16 அணிகள்

  • ஏ பிரிவு: இந்தியா, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம்

  • பி பிரிவு: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், சமோவா

  • சி பிரிவு: ஆஸ்திரேலியா, வங்கதேசம், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம்

  • டி பிரிவு: இங்கிலாந்து, இலங்கை, அமெரிக்கா, ஸ்காட்லாந்து.

இந்திய அணியின் போட்டி அட்டவணை

  • ஜனவரி 22, 2027: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

  • ஜனவரி 24, 2027: இந்தியா – நேபாளம்

  • ஜனவரி 26, 2027: இந்தியா – அயர்லாந்து

இந்திய அணியின் மூன்று லீக் போட்டிகளும் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள டியு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டமான சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறும். இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com