ஜுனியர் உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்

ஜுனியர் உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் வருகிற 30-ந்தேதி இந்தியா- பாகிஸ்தான் மோதுகிறது. #U19WorldCup
ஜுனியர் உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்
Published on

கிறிஸ்ட் சர்ச்:

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த காலிறுதியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.2 ஓவரில் 265 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 42.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி வரும் 30-ம் தேதி நடக்கும் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com