ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் பிரண்டன் மெம்முல்லன் (ஸ்காட்லாந்து), மிலிண்ட் குமார் (அமெரிக்கா) மற்றும் முகமது வாசீம் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார்.

இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஹேய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), சோலி டைரான் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்தியா) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com