விராட் கோலி குறித்து மனம் திறந்த உமேஷ் யாதவ்

விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து உமேஷ் யாதவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்
புதுடெல்லி,
இந்திய நட்சத்த்திர வீரர் விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
விராட் கோலி டெஸ்ட் கேப்டனானபோது, அவரின் ஒரே நோக்கம் டெஸ்ட் கிரிகெட்டில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். நாம் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடப் போவதில்லை, எங்கு சென்றாலும் வெல்ல வேண்டும், நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என அனைத்து வீரர்களிடமும் கூறினார். என தெரிவித்துள்ளார் .
விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story






