உத்தராகண்ட் பிரீமியர் லீக் : சாம்பியன் பட்டம் வென்ற டேராடூன் வாரியர்ஸ்!

ஹரித்வார் எல்மாஸ் அணி 19.4 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
உத்தராகண்ட் பிரீமியர் லீக்
Published on: 

உத்தராகண்ட் ,

உத்தராகண்ட் பிரீமியர் லீக் (UPL)2026 இறுதிப்போட்டியில் ஹரித்வார் எல்மாஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டேராடூன் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

குணால் சண்டேலா அதிரடி பேட்டிங்

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டேராடூன் வாரியர்ஸ் கேப்டன் குணால் சண்டேலா, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தொடக்கத்தில் 22 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும், கேப்டன் குணால் சண்டேலா பொறுப்புடன் விளையாடி 51 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய முகமது உஸைர் மாலிக், 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டேராடூன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 197/7 என்ற வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது.

161 ரன்களில் சுருண்ட ஹரித்வார் எல்மாஸ்

இதையடுத்து 198 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஹரித்வார் எல்மாஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே பின்னடைவு ஏற்பட்டது. 3-வது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி, டேராடூன் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

தனியாளாகப் போராடிய சாஷ்வத் டாங்வால்

ஹரித்வார் எல்மாஸ் அணியில் சாஷ்வத் டாங்வால்மட்டும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காகப் போராடினார். அவர் 31 பந்துகளில் 59 ரன்கள்எடுத்தார். ஆனால், அவருக்கு மற்ற வீரர்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் ஹரித்வார் எல்மாஸ் அணி 19.4 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சாம்பியன் டேராடூன் வாரியர்ஸ்!

இதன் மூலம் டேராடூன் வாரியர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, உத்தராகண்ட் பிரீமியர் லீக் 2026 சாம்பியன் பட்டத்தை வென்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com