

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
சூர்யவன்ஷி விளையாடுவதைப் போன்று வேறு எந்த வீரரும் அதிரடியாக விளையாடுவதைத் தான் பார்த்ததில்லை.குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், ஐபிஎல் தொடரில் அவர் படைத்துள்ள சாதனைகள் நம்ப முடியாத அளவுக்கு இருப்பதாகவும் புகழ்ந்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு தலைமுறையிலும் குழந்தைகள் தங்களது முன்மாதிரியாகக் கருதும் வகையில் ஒரு கிரிக்கெட் வீரர் இருக்க வேண்டும்.அந்த இடத்தை சூர்யவன்ஷி பெறுவதற்கான திறமை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது டி20 கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சாதிக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு. அவரது ஆட்டத்தில் காணப்படும் நிலைத்தன்மையும், வேகமாக வரும் பந்துகளைத் துல்லியமாகக் கணித்து சிக்சருக்கு விரட்டும் திறனும் வியப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.