ஐபிஎல்: ‘அந்த சாதனையை உடைப்பதே என் இலக்கு’ - வைபவ் சூர்யவன்ஷி

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாட உள்ளார்.
ஐபிஎல்:  ‘அந்த சாதனையை உடைப்பதே என் இலக்கு’ - வைபவ் சூர்யவன்ஷி
Published on

புதுடெல்லி:

14 வயதான இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி , இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர், 7 போட்டிகளில் 252 ரன்கள் எடுத்ததுடன் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி கவனம் பெற்றார்.

மேலும், அண்மையில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் அடித்து அசத்தினார். இதற்கிடையில் பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், 2026 ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயிலின் 175 ரன்கள் சாதனையை முறியடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

Also Read
கோலி, ரோகித் - ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பதில்
ஐபிஎல்:  ‘அந்த சாதனையை உடைப்பதே என் இலக்கு’ - வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் வரலாற்றில் 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள் கிறிஸ் கெயில் மற்றும் மெக்கல்லம் மட்டுமே என்பது குறிப்பிடததக்கது.

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் வைபவ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com