

புதுடெல்லி,
இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் அணுகுமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இளம் வீரருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, சரியான தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டும். இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், அவர்களை அணியிலிருந்து நீக்குவது சரியான முடிவாக இருக்காது.
மேலும், இளம் வீரர் என்பதற்காகவோ அல்லது ரசிகர்கள் அவரைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதற்காகவோ அணியில் மாற்றம் செய்வது சரியல்ல. என தெரிவித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியிடம் ஏற்கெனவே கவுதம் கம்பீர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.