

புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.
வைபவ் சூர்யவன்ஷி திறமை கொண்ட இளம் வீரர் என்று ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
வைபவ் மிகச்சிறந்த திறமை கொண்ட இளம் வீரர். அவர் ஐபிஎல்லில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதுமட்டுமல்லாமல், பல்வேறு நிலைகளிலான போட்டிகளிலும் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் அவரைப் பற்றி அணிக்குள் பேசினோம். மேலும், ஐபிஎல்லில் அவருக்கு எதிராக விளையாடிய எங்கள் வீரர்களிடமிருந்து அவரைப் பற்றிய தகவல்களையும் பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.