வங்காளதேசத்திற்கு எதிரான வெற்றி...எங்கள் வீரர்கள் அனைத்து துறைகளிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர் - பாபர் ஆசம்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கொல்கத்தா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த ஆட்டத்தில் எங்களது அணியின் வீரர்கள் மூன்று வகையான துறைகளிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக பக்கர் ஜமான் 20-30 ஓவர் வரை நின்று பேட்டிங் செய்து விட்டால் அந்த போட்டி நிச்சயம் வித்தியாசமான போட்டியாக மாறிவிடும். அந்த அளவிற்கு அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

இன்று அவர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது பேட்டிங்கை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இனிவரும் இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்று அதன்பின் என்ன நடக்கிறது? என்பதை காணவிருக்கிறோம்.

இந்த ஆட்டத்தில் எங்களது அணியின் சார்பாக பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி தொடக்கத்திலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். மிடில் ஓவர்களிலும் வங்காளதேச அணியின் வீரர்களை பெரிய பார்ட்னர்ஷிப் ஏற்படுத்த விடாமல் எங்களது அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த மைதானத்தில் இந்திய ரசிகர்கள் எனக்கும் எங்களது அணிக்கும் தந்த வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com