

புதுடெல்லி
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. கிரிக்கெட் உலகின் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி என்பதால், இந்த போட்டிக்கு உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதில் வீழ்த்தியது.
இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்தும், மூவர்ணக் கொடியை ஏந்தியும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினர். போட்டி நடைபெற்ற கொழும்பு பிரேமதாசா மைதானத்திற்கு வெளியேயும் இந்திய ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினர்.