பாக். எதிரான வெற்றி...உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - தப்ரைஸ் ஷம்சி

சென்னையில் முதல்முறையாக ஆடுகிறேன், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், ஆரவாரமும் மிகச்சிறப்பாக இருந்தது என ஷம்சி கூறினார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்னர் ஆட்ட நாயகன் விருது பெற்ற தப்ரைஸ் ஷம்சி பேசியதாவது,

உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தில் என்னுடைய பணி மிகவும் சிறப்பாக இருந்தது. ஏனெனில் துவக்கம் முதலே எங்களது அணியின் வீரர்கள் பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தி வந்ததால் என்னால் சிறப்பாக பந்து வீச முடிந்தது.

நான் போதுமான வரை கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்று விளையாடியுள்ளேன். சில சமயம் நாம் நினைத்தது நடக்கும் சில சமயம் நடக்காமலும் போகும். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்து விட்டு வந்து பேட்டி கொடுப்பேன் என்று நினைக்கவில்லை.

இந்த வெற்றி எங்களுக்கு மிகச் சிறப்பான நம்பிக்கையை அளித்துள்ளது. இறுதிவரை மகாராஜ் மிகச் சிறப்பாக விளையாடி நம்ப முடியாத வெற்றியை பெற்று தந்தார். சென்னையில் முதல்முறையாக ஆடுகிறேன். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், ஆரவாரமும் மிகச்சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com