ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன ?

நமது அணியில் சிறப்பாகச் செயல்பட்ட சிலரைப் பாராட்ட வேண்டும்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன ?
Published on: 

ராய்ப்பூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டி கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்தது. இந்தியா-ஜிம் பாப்வே பெண்கள் அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக் கட்டுவது இதுேவ முதல் முறையாகும். சமீபத்தில் மறைந்த ஜிம்பாப்வே முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும். நடுவருமான சாரா தம்பனேவானாவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரு அணியினரும் கையில் கருப்பு பட்டை கட்டியிருந்தனர். 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்மிர்தி மந்தனா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 114 ரன்னில் கட்டுப்படுத்தப்பட் டது. ஷரேன மேயர்ஸ் 43 ரன்களும், கெல்லிஸ் என்ட்லோவு 42 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் நந்தனி ஷர்மா 2 விக்கெட்டும், கிரந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஸ்ரீசரனி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19 ரன்னுக்குள் புதிய கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (9 ரன்), அனுஷ்கா ஷர்மா (4 ரன்), ஹர் மன்பிரீத் கவுர் (1 ரன்), ஷபாலி வர்மா (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டு களை இழந்து தள்ளாடியது. இதன் பின்னர் அறிமுக வீராங்கனை நிக்கி பிர சாத்தும், தீப்தி ஷர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றி யதுடன், வெற்றிப்பாதைக்கும் அடித்தளமிட்டனர். தீப்தி ஷர்மா தனது பங் குக்கு 49 ரன்கள் (37 பந்து, 8 பவுண்டரி) விளாசினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் (7 ரன்) சிக்சருக்கு முயற்சித்து கேட்ச் ஆனார்.இந்திய அணி 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து 4 விக் கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிக்கி பிரசாத் 39 ரன்களுடனும் (35 பந்து, 6 பவுண்டரி). அருந்ததி ரெட்டி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றி தொடர்பாக பேசிய ஸ்மிருதி மந்தனா கூறியதாவது,

ஒரு அணியாக நாம் விரும்பிய விதத்தில் விளையாடாமல் இருந்திருக்கலாம். இருந்தாலும், வெற்றி என்பது வெற்றிதான். நமது அணியில் சிறப்பாகச் செயல்பட்ட சிலரைப் பாராட்ட வேண்டும். நந்தனி ஷர்மா மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். நிக்கி பிரசாத் தனது அறிமுகப் போட்டியிலேயே மிகுந்த நிதானத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினார். தீப்தி ஷர்மாவைப் பொறுத்தவரை, அவர் நீண்ட காலமாக இதையே சிறப்பாகச் செய்து வருகிறார்; அவர் உண்மையிலேயே இந்த விளையாட்டின் ஜாம்பவான். வெற்றி பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதே நேரத்தில், ஒரு குழுவாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அம்சங்களும் நிச்சயமாக நிறைய உள்ளன. அதிகம் அறிமுகமில்லாத ஒரு அணிக்கு எதிராக விளையாடுவது சவாலானதாக இருக்கலாம்; ஏனெனில், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை முழுமையாக நம்மால் கணிக்க முடியாது.இருப்பினும், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மெதுவான பந்துவீச்சு மாறுபாடுகளைப் பயன்படுத்தி நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்ட விதம் சிறப்பாகக் கைகொடுத்தது என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எதிராக முன்கூட்டியே தயாராகி, திட்டமிட்டிருந்தோம். ஆனால், வீடியோ காட்சிகளைப் பார்த்துத் தயாராவதற்கும், அவர்களை நேரடியாகக் களத்தில் எதிர்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com