

ஹராரே,
ஜிம்பாப்வேக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில்,
'நமது வீரர்கள் திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தினர். கேப்டன்ஷிப்பில் எனது முதல் வெற்றியை பெற்றதில் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மயங்க் யாதவ், சரியான லென்த்தில் அபாரமாக பந்து வீசினார். சூர்யவன்ஷியின் பேட்டிங் பிரமாதம். அவர் அச்சமற்ற ஒரு இளைஞர். அவர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது.
மேலும் அவர் ஏற்கனவே இந்த மைதானத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 175 ரன் கள் குவித்து இருந்தார். இதனால் இந்த ஆடுக ளத்தன்மை பற்றி அவருக்கு ஓரளவு தெரிந்திருக்கும். எனவே களத்தில் இறங்கும் போது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார். அதை பார்ப்பது மகிழ்ச்சி.
இதே மைதானத்தில் இன்னும் இரு ஆட்டங்களில் விளையாட உள்ளோம். இன்றைய செயல்பாடு அணியில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கையை கொடுக்கும்' என்றார்.