ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி: சுப்மன் கில் கூறியது என்ன.?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி: சுப்மன் கில் கூறியது என்ன.?
Published on

நியூ சண்டிகர்,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெற்றிக்குப் பின் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:-

”முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது, நாம் எங்கு விளையாடினாலும் அல்லது ஆடுகளத்தின் தன்மை எப்படி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் 350 ரன்களைப் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.

எந்த இடத்திலும் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தக்கூடிய திறன் எங்கள் பந்துவீச்சு குழுவிடம் உள்ளது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அணியில் மாற்றங்கள் நிகழும்போதெல்லாம், பேட்டிங் குழு அதிக அழுத்தத்திற்கு உள்ளாவதாக நாங்கள் உணர்கிறோம். அதே வேளையில், அனுபவத்தைப் பெறவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com