விஜய் ஹசாரே கிரிக்கெட்: அரைஇறுதியில் கர்நாடகா-மும்பை இன்று பலப்பரீட்சை

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் கர்நாடகா-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
விஜய் ஹசாரே கிரிக்கெட்: அரைஇறுதியில் கர்நாடகா-மும்பை இன்று பலப்பரீட்சை
Published on

புதுடெல்லி,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டெல்லி பாலம் மைதானத்தில் நடைபெறும் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, முன்னாள் சாம்பியனான மும்பையை எதிர்கொள்கிறது.

கர்நாடக அணியில் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக 4 சதம் அடித்து சாதனை படைத்ததுடன் 673 ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் ரவிகுமார் சமார்த் 3 சதம் உள்பட 605 ரன்கள் திரட்டி இருக்கிறார். மும்பை அணியை பொறுத்த மட்டில் பொறுப்பு கேப்டன் பிரித்வி ஷா 3 சதங்களுடன் 589 ரன்கள் சேர்த்துள்ளார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த ஆட்டத்தில் ஆடாததால் மும்பை அணி பேட்டிங்கில் பிரித்வி ஷாவை தான் வெகுவாக நம்பி இருக்கிறது.

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் அரங்கேறும் மற்றொரு அரைஇறுதியில் குஜராத்-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன. இவ்விரு ஆட்டங்களும் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com