விஜய் ஹசாரே டிராபி; கருண் நாயர் சதம்... தமிழகத்தை வீழ்த்திய விதர்பா

விதர்பா தரப்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விசாகப்பட்டினம்,

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம் - விதர்பா அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற விதர்பா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய விதர்பா 43.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விதர்பா தரப்பில் நிதானமாக ஆடிய கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com