விஜய் ஹசாரே டிராபி: ரோகித் சர்மா விளையாடுவார் என தகவல்

உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாட ரோகித் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
விஜய் ஹசாரே டிராபி: ரோகித் சர்மா விளையாடுவார் என தகவல்
Published on: 

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ள விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடரில் மும்பை அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) தெரிவித்துள்ளார்.

பேட்டிங்

2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு தனது பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாட ரோகித் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அதிரடி

கடந்த விஜய் ஹசாரே தொடரில் சிக்கிம் அணிக்கு எதிராக 94 பந்துகளில் 155 ரன்கள் விளாசி அதிரடி காட்டியிருந்தார். சர்வதேசப் போட்டிகளுடன் உள்ளூர் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவது ரோகித்தின் போட்டி அனுபவத்தையும் ஆட்டத்திறனையும் மேம்படுத்த உதவும் என்பதால், அவரது இந்த முடிவு மும்பை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X