

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.
இந்தநிலையில், குறிப்பிடத்தக்க விஷயமாக அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்திய அளவில் இத்தகைய போக்கு அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த சூழலில் தான், தவெக தலைவர் விஜய் இம்முறை இரு தொகுதிகள் போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறியதாவது,
தோல்வி பயத்தால் தவெக தலைவர் விஜய் 2 இடங்களில் போட்டியிடுகிறார்; விஜய் போட்டியிட உள்ள இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைவார். விஜயால் எந்த இடத்தில் வெற்றி பெறுவோம் என்பதை கூட முடிவு செய்ய முடியவில்லை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. தவெகவை கட்சியாகவே கருதவில்லை. என தெரிவித்தார்.