வினோ மன்கட் கோப்பை: ஷேவாக் மகன் ஆர்யாவிர் 173 ரன்கள் குவித்து அசத்தல்

இந்திய முன்னாள் வீரர் ஷேவாக்கின் மகனும், கேப்டனுமான ஆர்யாவிர் அதிரடியில் கலக்கினார்.
வினோ மன்கட் கோப்பை: ஷேவாக் மகன் ஆர்யாவிர் 173 ரன்கள் குவித்து அசத்தல்
Published on: 

விஜயநகரம்,

வினோ மன்கட் கோப்பைக்கான (19 வயதுக்குட்பட்டோர்) ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் நடந்து வருகிறது. இதில் 'இ' பிரி வில் இடம் பெற்றுள்ள டெல்லி அணி நேற்று சண்டிகாரை சந்தித்தது. முத லில் பேட் செய்த டெல்லி அணியில் இந்திய முன்னாள் வீரர் ஷேவாக்கின் மகனும், கேப்டனுமான ஆர்யாவிர் அதிரடியில் கலக்கினார்.

தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 143 பந்துகளில் 173 ரன்கள் (19 பவுண்டரி, 8 சிக்சர்) திரட்டினார். இதன் மூலம் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 289 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இந்த இலக்கை சண்டிகார் அணி 41.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருபேஷ் யாதவ் 167 ரன்கள் (125 பந்து, 23 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com