

மும்பை,
15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் பெங்களூரு அணியின் 10-வது போட்டியில் நடப்பு சீசனின் முதல் அரைசதத்தை அடித்தார். மீண்டும் அதை தொடர்ந்து அவர் டக் அவுட்டாகி இருந்தார். இதனால் அவரின் மோசமான பேட்டிங் தொடர்கிறது.
இந்த நிலையில் தற்போது கோலியின் பேட்டிங் குறித்து பெங்களூரு அணியின் இயக்குனர் மைக் ஹெசன் கூறுகையில், " அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்தார். அவருக்கு அந்த போட்டியில் அதிர்ஷ்டம் கைகொடுக்க வில்லை. ஆனால் நிச்சயம் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை பார்க்கப் போகிறோம் என்று நினைக்கிறேன்.
அவர் அடுத்தடுத்த போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறார். மிக விரைவில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் " என மைக் ஹெசன் தெரிவித்தார்.