சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி

உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி இன்று புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக பாண்ட்யா 63 ரன்களும் விராட் கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த தொடரில் 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அதனை தொடர்ந்து குப்தில், பாபர் ஆசம் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com