கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்ற இந்திய அணி

இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Image Courtesy : Twitter BCCI 
Image Courtesy : Twitter BCCI 
Published on

மும்பை,

இந்திய - தென் ஆப்பிரிக்க இடையிலான 20 ஓவர் தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

இந்த மாதம் 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் இந்த டி20 போட்டி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடர் 4 போட்டிகளாடு முடித்து கொள்ளப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சுமார் 2 வார ஓய்வுக்கு பிறகு தற்போது இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சுற்று பயணத்திற்கு இன்று புறப்பட்டு சென்றுள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் இருந்து விராட் கோலி, புஜாரா, சிராஜ், பும்ரா, ஜடேஜா, கில், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்கள் இன்று இங்கிலாந்து புறப்பட்டனர். அங்கு இந்திய அணி இங்கிலாந்து கவுண்டி அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளனர். அதை தொடர்ந்து டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com