இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணித்த இந்திய கேப்டன் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ViratKohli
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணித்த இந்திய கேப்டன் கோலி
Published on

நாட்டிங்ஹாம்,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் விராட் கோலி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி பரிசளிப்பு விழாவில் பேசியதாவது:- இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அந்த மக்கள் பெரிய துயரத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், எங்களால் முடிந்தது வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிப்பதே ஆகும்.

ரஹானேவின் இன்னிங்ஸ் மிக முக்கியமாக அமைந்தது. உணவு இடைவேளைக்கு முன்பு புஜாராவை இழந்த பிறகு ரஹானே பாசிட்டிவாக ஆடினார். இதற்காகத்தான் அவரை நாங்கள் விரும்புகிறோம். அவர் ஆட்டத்தின் போக்கையும், தன்மையையும் மாற்றக்கூடியவர். அதைத்தான் அவர் செய்தார்.இங்கிலாந்து பவுலர்கள் தரமான பவுலர்கள் எனவே அவர்களுக்கு எதிராக ரன்களை எடுக்க தைரியம் தேவை. இதைத்தான் முதல் இன்னிங்ஸில் ரஹானேவும், 2வது இன்னிங்சில் புஜாராவும் செய்தனர்.

என்னுடைய இன்னிங்சை நான் மனைவி அனுஷ்காவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்தான் என்னை ஊக்குவித்தார். எங்கள் உடற்தகுதி, மனநிலை என்று அனைத்திலும் கவனம் செலுத்தினோம். தொடரை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நாங்கள் நம்பவில்லை என்றால் இப்போது 2-1 என்று தொடர் ஆகியிருக்காது. எப்போதுமே முன்னேறிச்செல்லவும் வெற்றி பெறவும்தான் நாங்கள் விரும்புகிறோம் என்றார் விராட் கோலி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com