இந்தியாவில் அந்த வார்த்தைக்கு விராட் கோலிதான் எடுத்துக்காட்டு - அகர்கர் பாராட்டு

இப்போதுள்ள 15 - 16 வயது பையன்கள் தாங்கள் இருக்க வேண்டியதை விட பிட்டாக இருக்கின்றனர் என்று அகர்கர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அந்த வார்த்தைக்கு விராட் கோலிதான் எடுத்துக்காட்டு - அகர்கர் பாராட்டு
Published on

புதுடெல்லி,

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். மேலும் நவீன கிரிக்கெட்டில் பிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அளவுக்கு கடுமையான பயிற்சிகளை செய்து தம்முடைய உடலை கச்சிதமாக வைத்திருக்கும் விராட் கோலி அதை பயன்படுத்தி பீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் பிட்னஸ் எனும் வார்த்தைக்கு விராட் கோலி எடுத்துக்காட்டாக இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரால் இப்போதுள்ள 15 வயது வீரர்களும் பிட்டாக இருப்பதாக தெரிவிக்கும் அகர்கர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"விராட் கோலியை பாருங்கள். அவர் பிட்னசுக்கு அளவுகோலை அமைத்தவர்களில் ஒருவர். கடந்த 10 - 15 வருடங்களாக விளையாடி வரும் அவர் மென்மேலும் பிட்டாகியுள்ளார். அதற்கான முடிவுகளை நீங்கள் பாருங்கள். அவரைப் போன்ற ஒருவர் முன்னுதாரணமாக இருந்து உடல் தகுதிக்கு தேவையான விஷயங்களை முன்வைத்தால் உடற்பயிற்சி நிலைகள் படிப்படியாக முன்னேறும்.

இங்கே உள்ள அனைத்து பயிற்சி முகாமிலும் பி.சி.சி.ஐ. உடற்பயிற்சி கருவியை வைத்துள்ளது. எனவே நீங்கள் வேகமாக கற்றுக்கொள்ள முடியும். இப்போதுள்ள 15 - 16 வயது பையன்கள் தாங்கள் இருக்க வேண்டியதை விட பிட்டாக இருக்கின்றனர். அவர்களுக்கு பிட்னஸ் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவையான வசதிகளும் எளிதாக கிடைக்கின்றன" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com