வங்காளதேச வீரருக்கு தனது ஜெர்சியை பரிசாக வழங்கிய விராட் கோலி..!

தனது இந்திய அணியின் ஜெர்சியை வங்காளதேச வீரர் மெஹிதி ஹசனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
வங்காளதேச வீரருக்கு தனது ஜெர்சியை பரிசாக வழங்கிய விராட் கோலி..!
Published on

மும்பை,

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரில் பங்கேற்றது . ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. . இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்திருந்தது. இந்நிலையில், போட்டியின் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே அக்ஷர் பட்டேல், உனத்கட், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அஷ்வின், ஸ்ரேயஸ் அய்யர் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு அணியை வெற்றி பெறச் செய்தனட். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த நிலையில் போட்டி முடிவுக்கு பிறகு விராட் கோலி தனது இந்திய அணியின் ஜெர்சியை வங்காளதேச வீரர் மெஹிதி ஹசனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து மெஹிதி ஹசன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் ,

"சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com