ஐ.பி.எல்.வரலாற்றில் கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் கோலி

நடப்பு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி இதுவரை 708 ரன்கள் குவித்துள்ளார்.
ஐ.பி.எல்.வரலாற்றில் கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் கோலி
Published on

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றிருந்த 17-வது ஐ.பி.எல். தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த பெங்களூரு அதன்பின் தொடர்ச்சியாக 6 வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

பெங்களூரு அணியின் இந்த வெற்றிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை நடைபெற்ற 14 போட்டிகளில் அவர் 708 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

விராட் கோலி ஏற்கனவே 2016 ஐ.பி.எல். சீசனிலும் 700 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 2 சீசன்களில் 700+ ரன்களை அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கிறிஸ் கெய்ல் 2012 மற்றும் 2013 சீசன்களில் 700+ ரன்கள் அடித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com