விராட் கோலிக்கு காலில் காயம்; இறுதி போட்டியில் பங்கேற்பாரா...? பயிற்சி ஊழியர் பதில்


விராட் கோலிக்கு காலில் காயம்; இறுதி போட்டியில் பங்கேற்பாரா...? பயிற்சி ஊழியர் பதில்
x
தினத்தந்தி 9 March 2025 2:15 AM IST (Updated: 9 March 2025 2:22 AM IST)
t-max-icont-min-icon

விராட் கோலியின் காலில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டதும் பயிற்சியை நிறுத்தி விட்டு சென்றார்.

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டிக்கு முன்பு, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு பயிற்சியின்போது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து ஒன்று தாக்கியதில் கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால், உடனடியாக அவர் பயிற்சியை நிறுத்தினார். மருத்துவர் ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தேற்றினார். காயம் ஏற்பட்ட பகுதியில் மருந்து தடவி, பேண்டேஜ் போடப்பட்டது.

இதன்பின்னர், பேட்டிங் பயிற்சியில் கோலி ஈடுபடவில்லை. இதுபற்றி இந்திய அணியின் பயிற்சி ஊழியர் ஒருவர் கூறும்போது, அந்த காயம் அவ்வளவு தீவிரம் வாய்ந்ததல்ல. இறுதி போட்டியில் கோலி விளையாடுவார் என கூறினார்.

ரன் இலக்கை அடைவதற்காக ஆடும் விளையாட்டில் (சேசிங்) விராட் கோலியின் அபார திறமையை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. அதிலும், போட்டியில் வெற்றி பெறும்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ஆர்ப்பரிப்பார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி துபாயில் நடந்தபோது, விராட் கோலி சேசிங்கிற்காக, 84 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதனை அவருடைய ரசிகர்கள் வரவேற்றனர். இந்த சூழலில், இறுதி போட்டியில் அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

1 More update

Next Story