விராட் கோலி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி - கிறிஸ் கெயில்

கோப்புப்படம்
2025ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது.
புதுடெல்லி,
2025ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது. ஐ.பி.எல். தொடர் தொடங்கியது முதல் ஆடி வரும் பெங்களூரு அணி வென்ற முதல் கோப்பை இதுதான். ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்றது கண்ணீர் மல்க விராட் கோலி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், ஐ.பி.எல் கோப்பையை ஆர்.சி.பி மற்றும் நல்ல நண்பர் விராட் கோலி வென்றதில் மிக்க மகிழ்ச்சி என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் கோப்பையை வென்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். விராட் கோலிக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்வதற்காக காத்திருந்தோம். நான் ஏற்கனவே கூறியதைப் போல, காத்திருப்போருக்கு நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்.
ஐ.பி.எல் கோப்பையை தூக்கிப் பிடிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஆர்.சி.பி கோப்பையை வெல்வதை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அணியில் இல்லாவிட்டாலும் ஐ.பி.எல் கோப்பையை தொடும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவழியாக கோப்பையை வென்றுவிட்டோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






