முன்பு அவ்னீத் கவுர்.. இப்போது இவரா?... மீண்டும் இன்ஸ்டாகிராம் லைக் விவகாரத்தில் சிக்கிய கோலி

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை 'லைக்' செய்ததற்காக மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார் கோலி.
முன்பு அவ்னீத் கவுர்.. இப்போது இவரா?... மீண்டும் இன்ஸ்டாகிராம் லைக் விவகாரத்தில் சிக்கிய கோலி
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை 'லைக்' செய்ததற்காக மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.

ஜெர்மன் - தென் ஆப்பிரிக்க இன்ப்ளூயன்சர் லிஸ்லாஸ் (LizLaz) என்பவரின் புகைப்படம் ஒன்றை விராட் கோலி 'லைக்' செய்துள்ளதாக தெரிகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கோலி அந்த இன்ப்ளூயன்சரை இன்ஸ்டாகிராமில் பாலோ (Follow) செய்யவில்லை. அவர் பாலோ செய்யாத ஒருவரின் புகைப்படத்திற்கு லைக் விழுந்ததால், ரசிகர்கள் அதை வைரலாக்கத் தொடங்கி உள்ளனர்.

Also Read
வேகப்பந்து வீச்சாளர் விலகல்... ஐதராபாத் அணிக்கு பின்னடைவு
முன்பு அவ்னீத் கவுர்.. இப்போது இவரா?... மீண்டும் இன்ஸ்டாகிராம் லைக் விவகாரத்தில் சிக்கிய கோலி

இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 2025-ல் நடிகை அவனீத் கவுரின் பதிவை கோலி 'லைக்' செய்தபோது, அது தவறுதலாக நடந்ததாகக் கூறி, அதை "Instagram Algorithm" (இன்ஸ்டாகிராம் அல்காரிதம்) செய்த குளறுபடி என்று விளக்கமளித்திருந்தார். தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு 'லைக்' சம்பவம் நடந்திருப்பது, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக வலைதளங்களில் இது ஒருபுறம் இருந்தாலும், கிரிக்கெட் களத்தில் கோலி அசத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆர்சிபி (RCB) அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் (Opener) என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com