ஒற்றைக் கையில் மிரட்டலான கேட்ச் பிடித்த கோலி- அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரேலிய வீரர்கள்- வைரல் வீடியோ

கேட்ச் மட்டுமின்றி பறந்து கொண்டே ஸ்டெம்பை நோக்கி பந்தை வீசி, கோலி செய்த ரன் அவுட் வீடியோவும் வைரலாகி வருகிறது.
Screengrab from Instagram/ t20worldcup
Screengrab from Instagram/ t20worldcup
Published on

பிரிஸ்மேன்,

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல்.ராகுல் 57 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் என சிறப்பாக விளையாட 20 ஓவர்களில் இந்தியா 186/7 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதும், கடைசி 2 ஓவர்களில் மிக மோசமாக விக்கெட்களை பறிகொடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஓவரின் மூன்றாவது பந்தை பேட் கம்மின்ஸ் லாங் ஆனில் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் நிற்காமல் லைனிலிருந்து கொஞ்சம் முன்பாக நின்ற விராட் கோலி, சிக்ஸருக்கு சென்ற பந்தை ஒற்றை கையில் பிடித்து மிரட்டினார்.

விராட் கோலியின் கேட்ச்சை அனைவருமே வியந்து பார்த்தனர். விராட் கோலி பீல்டிங் செய்ததற்கு பின்னால் தான் வார்னர், பின்ச், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் விராட் கோலியின் கேட்ச்சை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். விராட்கோலியின் அந்த மிரட்டலான கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

இதை தவிர இந்த போட்டியில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தை தொட்டு விட்டு ரன் எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிம் டேவிட்டை விராட் கோலி ரன் ஆவுட் செய்த விதம் ரசிகர்களை பூரிப்படைய வைத்தது. பந்தை எடுத்து பறந்து கொண்டே ஸ்டெம்பை நோக்கி வீசி ரன் அவுட் செய்த விராட் கோலியின் வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

விராட் கோலி மீண்டும் தனது பேட்டிங் பார்முக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது அவரின் பில்டிங்கும் அட்டகாசமாக இருப்பதால் இந்தியாவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com