

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியம் 2026-27-ம் ஆண்டில் உள்நாட்டில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. அடுத்த சீசனில் இந்திய அணி மொத்தம் 22 சர்வதேச போட்டிகளில் 17 நகரங்களில் விளையாடுகிறது.
இந்த நிலையில் முன்னாள் கேப்டன்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 2027-ம்ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர்கள் தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடுவதால் அவர்க ளுக்காக சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் எண்ணிக்கையை கிரிக்கெட் வாரியம் உயர்த்துமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர்கள் அடுத்த சீசனில் சொந்த மண்ணில் மொத்தம் 9 ஒரு நாள் போட்டிகளில் விளை யாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.