ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்

ஒருநாள் போட்டிக்கான அணியில் விராட் கோலி இடம் பெற்று இருந்த நிலையில் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
விராட் கோலி
Published on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜூன் 6 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி அணி விவரம் வருமாறு;

சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், பட்டிகல்,நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்ம்து சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், கர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரேல்,

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி

கில் ( கேப்டன்), ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ன் குர்ன், பிரசித் கிருஷ்ணா, பிரசீத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிக்கான அணியில் விராட் கோலி இடம் பெற்று இருந்த நிலையில் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். இதனால் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் 2026 அட்டவணை

ஜூன் 6- டெஸ்ட் போட்டி- நியூ சண்டிகர்

ஜூன் 13 முதல் ஒருநாள் போட்டி : தர்மசாலா

ஜூன் 17 இரண்டாவது ஒருநாள் போட்டி : லக்னோ

ஜூன் 20 மூன்றாவது ஒருநாள் போட்டி - சென்னை

X

Daily Thanthi
www.dailythanthi.com