இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் விராட் கோலி.... வெளியான தகவல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்பில் ஆகஸ்டு 2, 4, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இலங்கை தொடரில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று ரோகித் விளையாட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரோகித் வரிசையில் தற்போது விராட் கோலியும் கம்பீரின் கோரிக்கையை ஏற்று இலங்கை தொடரில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரின் பயணம் இந்த தொடருடன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com