2022-க்குப் பிறகு மீண்டும்... கோலியின் மோசமான சாதனை - கலக்கத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

விராட் கோலி தனது ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை டக்-அவுட் ஆவது இது இரண்டாவது முறையாகும்.
2022-க்குப் பிறகு மீண்டும்... கோலியின் மோசமான சாதனை  - கலக்கத்தில் ஆர்சிபி ரசிகர்கள்
Published on

சென்னை,

கிரிக்கெட் உலகின் 'ரன் மெஷின்' என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கு, 2026 ஐபிஎல் சீசன் சில கசப்பான நினைவுகளைக் கொடுத்துள்ளது. தனது நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில், கோலி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக்-அவுட் (0) ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் கோலி 'கிளீன் போல்டு' ஆனார். தொடர்ந்து நேற்று ராய்ப்பூரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே 'கோல்டன் டக்' (முதல் பந்திலேயே அவுட்) ஆகி வெளியேறினார்.

கோலி போன்ற ஒரு ஜாம்பவான் வீரருக்கு ஏற்பட்டுள்ள இந்த சரிவு, சமூக வலைதளங்களில் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. விராட் கோலி தனது ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை டக்-அவுட் ஆவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக 2022 சீசனில், லக்னோவுக்கு எதிராக துஷ்மந்தா சமீரா பந்திலும், அடுத்த போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக மார்கோ யான்சன் பந்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார். அந்த 2022 சீசன் தான் கோலியின் ஐபிஎல் கேரியரிலேயே மிகக்குறைந்த சராசரியைக் (22.73) கொண்டிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்ற ஒரு சூழல் 2026-லும் மீண்டும் திரும்புவது ஆர்சிபி ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

Also Read
விஜய் பதவியேற்பு விழாவில் 'சிஎஸ்கே' வீரர்? - "கடமையை விட மேட்ச் முக்கியம்" - வைரலாகும் அஸ்வினின் பதிவு
2022-க்குப் பிறகு மீண்டும்... கோலியின் மோசமான சாதனை  - கலக்கத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

புள்ளிவிவரங்களின்படி, பவர்-பிளே ஓவர்களிலேயே விராட் கோலி ஆட்டமிழந்தால், ஆர்சிபி அணியின் வெற்றி வாய்ப்பு பெருமளவு குறைகிறது. இந்த சீசனில் கோலி சீக்கிரம் அவுட் ஆன 5 போட்டிகளில் 4-ல் ஆர்சிபி தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com