கோலி தலைமையில் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ந்தேன் - ரோகித் சர்மா

விராட் கோலி தலைமையில் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ந்தேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கோலி தலைமையில் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ந்தேன் - ரோகித் சர்மா
Published on

மும்பை,

ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி திடீரென நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமணம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ தொலைக்காட்சிக்கு ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது பேசிய ரோகித் சர்மா, இந்திய அணியை வழிநடத்திய 5 ஆண்டும் விராட் கோலி ஒவ்வொரு முறையும் முன்னின்று வழிநடத்தினார்.

மைதானத்திற்குள் நாங்கள் நுழையும் போது அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்ற மன உறுதி ஏற்பட்டது. அது தான் ஒட்டுமொத்த அணிக்கான செய்தியாகும்.

கோலி தலைமையின் கீழ் மகிழ்ச்சியாக விளையாடினோம். அவரின் தலைமையின் கீழ் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளனேன். கோலி தலைமயில் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ந்தேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com