முகமது ஷமிக்கு ஆதரவாக வீரேந்திர சேவாக் டுவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஷமிக்கு ஆதரவாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
முகமது ஷமிக்கு ஆதரவாக வீரேந்திர சேவாக் டுவிட்
Published on

புதுடெல்லி,

நேற்று துபாயில் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 ஆட்டத்தில், 10 விக்கெட் வித்தியாத்தில் இந்தியாவை வென்றது பாபர் அசாம் தலைமையிலான அணி. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்திருந்தார். இந்தியாவின் இந்த தோல்விக்கு ஷமிதான் காரணம் என பலரும் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஷமிக்கு ஆதரவாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

அந்தப்பதிவில் அவர், 'முகமது ஷமி மீதான சமூக வலைதள தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம். அவர் ஒரு சாம்பியன், மேலும் ஆன்லைன் கும்பலை விட இந்திய தொப்பியை அணிந்த எவருடைய இதயத்திலும் இந்தியா அதிகமாக இருக்கிறது' என்று சேவாக் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், அடுத்த போட்டியில் தன்னுடைய திறமையை காட்டுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com