இந்தியாவுடனான போட்டி: அப்போது ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா? - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கேள்வி

இந்தியாவுடனான போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவிலிருந்து பாகிஸ்தான் பின்வாங்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான போட்டி: அப்போது ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா? - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கேள்வி
Published on

இஸ்லாமாபாத்,

இந்தியா- பாகிஸ்தான் இடையே அரசியல் மற்றும் எல்லை பதட்டங்கள் அதிகரித்த காலகட்டங்களிலும், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சென்று பலமுறை போட்டிகளில் விளையாடியதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவிலிருந்து பாகிஸ்தான் பின்வாங்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடுநிலையான இடங்களில் மட்டுமே விளையாடுவோம் என இந்தியா தெரிவித்தபோது, ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா? என கேள்வி எழுப்பினார்.

Also Read
இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு...இது வீரர்களின் முடிவல்ல - பாகிஸ்தான் கேப்டன்
இந்தியாவுடனான போட்டி: அப்போது ஐசிசி தூங்கிக் கொண்டிருந்ததா? - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கேள்வி

இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் நிலவிய போதிலும், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து பலமுறை விளையாடியதாக நினைவுபடுத்திய கம்ரான் அக்மல், ஆசியக் கோப்பை போட்டியின்போது இந்திய அணி, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததோடு, கோப்பையை ஏற்கவும் மறுத்ததாக குற்றம்சாட்டினார்.

இந்த செயல்கள் பாகிஸ்தானை அவமரியாதை செய்ததாகவும், அந்த நேரங்களில் ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com