பறந்து வந்த கேட்ச்... பலமாக மோதிக்கொண்ட இந்திய வீரர்கள் - அதிர்ச்சி வீடியோ!

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா 'ஏ'
Published on: 

புதுச்சேரி,

இந்தியா 'ஏ' மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின்போது இந்திய வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோர் கேட்ச் பிடிக்கச் சென்றபோது பலமாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேட்ச் பிடிக்க ஓடியபோது மோதல்

புதுச்சேரி சீசம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் 2-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்குர் வீசினார். அவர் வீசிய ஷார்ட் பந்தை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் ஓவன் புல் ஷாட் அடிக்க முயன்றார்.

ஆனால், பந்து சரியாக பேட்டில் படாமல் உயரே சென்று கவர்-பாயிண்ட் திசையை நோக்கி சென்றது.

கேட்சை விடாத பிரப்சிம்ரன்

அந்த பந்தை பிடிப்பதற்காக விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் வேகமாக ஓடி வந்தார். அதே நேரத்தில் கவர்-பாயிண்ட் திசையில் இருந்து நிஷாந்த் சிந்துவும் கேட்ச் பிடிப்பதற்காக ஓடி வந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் கவனிக்காமல், பந்தை பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக பலமாக மோதிக்கொண்டு மைதானத்தில் கீழே விழுந்தனர்.

இருப்பினும், கீழே விழுந்த நிலையிலும் பிரப்சிம்ரன் சிங் பந்தை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் மிட்செல் ஓவன் ஆட்டமிழந்தார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிரப்சிம்ரன் சிங் மற்றும் நிஷாந்த் சிந்து மோதிக்கொண்ட சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ஆஸ்திரேலியா 'ஏ' அணி 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com