மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய பிரிஸ்மென் ஹீட்

பிரிஸ்மென் ஹீட் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்
மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய பிரிஸ்மென் ஹீட்
Published on

ஆஸ்திரேலியா

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரிஸ்மேன் ஹீட் அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடர் தற்போது இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரிஸ்மென் ஹீட் அணி இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கும் சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 52 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பிரிஸ்மென் ஹீட் அணி.

பிரிஸ்மென் ஹீட் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜார்ஜியா வோல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் பிரிஸ்மென் ஹீட் அணி 18.3 வர்களில் 162 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com