

மும்பை,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில்,இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை அனைவரும் அறிந்ததே என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர் கூறியதாவது,
வைபவ் சூர்யவன்ஷியின் திறமை என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு போட்டிகளில் அதிக நேரம் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் அணியுடன் பயணம் செய்கிறார், டக்-அவுட்டில் இருக்கிறார், ஹோட்டலில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்.தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் தொடர்ந்து இருப்பது வைபவின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்தச் சூழலில் தரமான வீரர்களுடன் அவர் செலவிடும் ஒவ்வொரு நேரமும், இந்த உயர்ந்த தரத்தில் அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயிற்சியும், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். இந்திய அணியின் சூழலில் இருந்து கற்றுக்கொள்வது வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும். என தெரிவித்தார்.