

ஆக்லாந்து,
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இன்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த நிலையில், தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது;
தொடக்கத்தில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை என்று நினைக்கிறேன். பவர்பிளேயில், குறிப்பாக மூன்றாவது ஓவரில், அவர்கள் சிறந்த தொடக்கத்தை பெற்றனர். நாங்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயன்றோம். ஆனால் கிளென் பிலிப்ஸ் மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் அற்புதமான ஷாட்களை அடித்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
அடுத்த போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருவோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். எங்கள் வீரர்கள் பலர் இங்கு முதல் முறையாக வந்து விளையாடுகின்றனர். இங்குள்ள சூழலை புரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள சிறிது காலம் ஆகும். முதல் மூன்று ஆட்டங்களில் எங்கள் வீரர்கள் செயல்பட்ட விதம் அற்புதமாக இருந்தது. அடுத்த முறை அவர்கள் இங்கு வரும்போது சிறந்த அனுபவத்துடன் வருவார்கள். அடுத்த ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடுவோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.