

டெல்லி,
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறி இருப்பதாவது;
”நாங்கள் போதுமான அளவு ரன்களை எடுக்கவில்லை. அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பல தவறுகளைச் செய்தனர். நாங்கள் இரண்டு-மூன்று ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தோம். அங்கிருந்துதான் ஆட்டத்தின் போக்கு மாறியது. நாங்கள் நன்றாக ஆட்டத்தை தொடங்கினோம். ஆனால் திடீரென்று விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன.
விக்கெட்டுகள் கொத்துக்கொத்தாக விழும்போது, ஒன்று அல்லது இரண்டு ஓவர்களுக்கு அந்த அழுத்தத்தை நீங்கள் உள்வாங்கிக்கொண்டு விளையாட வேண்டும். இல்லையென்றால் அடுத்து வரும் பேட்ஸ்மேனுக்கு அது மிகவும் கடினமாகிவிடும். இப்போதைக்கு, நாங்கள் செய்த தவறுகளைப் பற்றி ஆராய்வோம். என்ன அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று சிந்திப்போம். அதன் அடிப்படையில், மாற்று வீரர்களாக இருக்கும் வீரர்களைக் கவனித்து, யாருக்கு வாய்ப்பளிக்கலாம், என்ன மாற்றங்களைச் செய்யலாம் என்று முடிவு செய்வோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.