பணத்தை பார்த்து நாங்கள் நட்பு பாராட்டுவதில்லை - விராட் கோலி உடனான உறவு குறித்து டு பிளெஸ்சிஸ்

வங்கியில் இருக்கும் பணத்தை பார்த்து விராட் கோலியுடன் நட்பு ஏற்படவில்லை என டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.
image courtesy:AFP
image courtesy:AFP
Published on

கேப்டவுன்,

உலகம் முழுவதிலும் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் நண்பர்கள் தங்களுடைய உறவைப் பற்றியும் பாசத்தை பற்றியும் நினைவு கூர்ந்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலியுடன் தம்முடைய நட்பு பற்றி தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பகிர்ந்து கொண்டார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வரும் அவர் விராட் கோலியுடன் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அந்த வகையில் டு பிளெஸ்சிஸ் - விராட் கோலி நல்ல நட்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் இருக்கும் பணத்தை பார்த்து விராட் கோலியுடன் நட்பு ஏற்படவில்லை என டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் எங்களுடைய உடலை முடிந்தளவுக்கு மெருகேற்றி சிறந்த தடகள வீரர்களாக இருப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம். அதனால் நாங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் ஒன்றாக நிறைய நேரம் செலவிடுகிறோம். நிறைய நேரம் பேசக்கூடிய நாங்கள் ஆடைகள் மற்றும் பொருட்களை ஒருவருக்கொருவர் மாற்றி அனுப்பிக் கொள்வோம். கடிகாரங்கள் என்று வரும்போது விராட் கோலி எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உண்மையில் கடிகாரங்களின் மீது அவருக்கு மோகம் இருக்கிறது. நாங்கள் வங்கியில் இருக்கும் பணத்தின் மதிப்பு அல்லது செல்வாக்கை பார்த்து நட்பு பாராட்டுவதில்லை. பேட்டிங்கிலும் நாங்கள் சமமாக கிளிக் செய்வோம். அவருடன் பேட்டிங் செய்வது நம்ப முடியாதது. அவர் நான் சேர்ந்து பேட்டிங் செய்வதற்கு விரும்பக்கூடிய ஒருவர். என்னிடத்தில் அவர் நிறைய எனர்ஜியை கொண்டு வருகிறார். அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது உங்களுக்கும் எனர்ஜியை கொடுக்கும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com