ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறோம்: இஷான் கிஷன்

ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறோம்.
ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறோம்: இஷான் கிஷன்
Published on

சென்னை,

இந்தியாவின் முதன்மையான முதல்தர கிரிக்கெட்டில் ஒன் றான துலீப் கோப்பை போட்டியில், 63-வது சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுக்கு பிறகு கோப்பையை தட்டிச் சென்றது. இதற்கு முன்பு 2011-12 மற்றும் 2012-13-ம் ஆண்டுகளிலும் வென்றிருந்தது. கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதுடன் ரூ.50 ஆயிரம் பரிசையும், தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டு, அதற்குரிய ரூ.2.5 லட்சத்தையும் பரிசாக பெற்றனர்.

வெற்றி தொடர்பாக கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன் கூறுகையில்,

ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறோம். அனைவரும் ஒருவருக்கொருவர் ஆத ரவாகவும், அக்கறையுடனும் இருந்தது தான் எனக்கு மிக முக்கியமான விஷயமாக தோன்றுகிறது. நானும் ஒரு நல்ல கேப்டனாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஆனால் இந்த பய ணம் இத்துடன் முடிந்து விடுவதில்லை. அனைத்து துறையிலும் தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். நான் இப்போது அதிக நிதானத்துடனும், சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவராக வும், மிகுந்த உத்வேகம் கொண்டவராகவும் மாறியிருக்கிறேன். அணிக்காக சிறந்த பங்க ளிப்பை அளிக்க வேண்டும். முன்னின்றி வழிநடத்த வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com