நாங்கள் சேசிங்கின் போது ஒரு கட்டத்தில் நல்ல நிலையிலேயே இருந்தோம்...ஆனால்... - ஹர்த்திக் பாண்ட்யா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 150 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 145 ரன்களே எடுத்தது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறும்போது,

நாங்கள் சேசிங்கின்போது ஒரு கட்டத்தில் நல்ல நிலையிலேயே இருந்தோம். ஆனால் இறுதி கட்டத்தில் சில தவறுகள் நடைபெற்றதே எங்களது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இளம் வீரர்களைக் கொண்ட எங்கள் அணி இதுபோன்ற தவறுகளில் இருந்து நிச்சயம் பாடத்தை கற்று ஒன்றாக மேல் எழுவோம். மேலும் இந்த போட்டிக்கு பிறகு இன்னும் நான்கு போட்டிகள் இருப்பதினால் நிச்சயம் எங்களால் இதிலிருந்து நல்ல விசயங்களை கற்றுக் கொண்டு முன்னேற முடியும்.

சேசிங்கின்போது விக்கெட்டுகளை இழந்தால் அது சேசிங்கை கடினமாக்கும். நாங்கள் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோது சேசிங்கில் தடுமாற்றம் ஏற்பட்டது.  இதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.  இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com