சாய் சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்பு கொடுப்போம்: தலைமை பயிற்சியாளர் கம்பீர்

யார் 3-வது வரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சாய் சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்பு கொடுப்போம்: தலைமை பயிற்சியாளர் கம்பீர்
Published on

மும்பை,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாளை முதல் டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது.

'புஜாராவின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் பேட்டிங்கில் 3-வது வரிசையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது சரியானது அல்ல. முக்கியமான இந்த பேட்டிங் வரிசைக்கு யாராவது ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்வது அவசியம். இந்த டெஸ்டில் தேவ்தத் படிக்கல் அல்லது சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் 3-வது வரிசையில் ஆடுவார்கள். யார் விளையாடினாலும் அவர்கள் ரன் குவிக்க வேண்டும்' என்றார். இதனால் இருவரில் யார் 3-வது வரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கம்பீர் இது தொடர்பாக கூறியதாவது,

நாங்கள் சாய் சுதர்சனுக்கு நியாயமான மற்றும் நீண்ட வாய்ப்பு கொடுப்போம். 4-5 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஒரு வீரரை மதிப்பிட்டால், நம்மால் ஒரு அணியை உருவாக்க முடியாது. என தெரிவித்துள்ளார்.

இதனால் நாளை 3-வது வரிசையில் சாய் சுதர்சன் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com